குமரனின் வரலாறு பாடத்திட்டம் குழுவால் ஏற்றுக் கொள்ளப்படும் போது முதல் நாடக நூலான திருப்பூர் கவிஞர் ஆழ்வைக்கண்ணன் எழுதிய திரும்பிப்பார் திருப்பூர் குமரன் என்ற வரலாற்று நாடக நூல், பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கல்லுாரி பாடதிட்டத்தில் திருப்பூர் குமரன்வரலாறு இடம் பெற வேண்டும் என்பது எங்களின் 20 ஆண்டு வேண்டுகோள். அதற்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக செனட் குழுவின் செயல்பாடும், தீர்மானமும் பாராட்டுக்குரியது. குமரனின் வரலாறு, மாணவ, மாணவிகளுக்கு தேசத்தின் மீதான நேசத்தை அதிகரிக்க செய்யும்.தேசப்பற்று வளரும். குமரனின் தியாகத்தை வெறும், 20 நிமிடங்களில் நாடக வடிவில்,நூலாக வடிவமைத்துள்ளோம். பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் நாடகமாக அரங்கேற்றி தேசத்துக்கு அவர் ஆற்றிய தியாகத்தை பறைசாற்றியும் வருகிறோம் என்கிறார் ஆழ்வை கண்ணன்.
மாணவ, மாணவிகளின் கல்விச் சூழலுடன் கலந்துவிட்ட வரலாற்று பக்கங்களில், திருப்பூர் குமரனின் வாழ்க்கை சுவடுகள், அழுத்தமாக இடம் பெற வேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. சமீபத்தில் கோவை பாரதியார் பல்கலைக்கழக செனட் கூட்டம் நடந்தது. இதில் நியமன செனட் உறுப்பினர் எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார், திருப்பூர் குமரனின் வாழ்க்கை வரலாறு, பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா? என்ற கேள்வி எழுப்ப வரும் கல்வியாண்டில், பாடத்திட்டத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்படும் என வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.